அமராவதி அணை மூலம், திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பழைய மற்றும் புதிய பாசன பகுதிகளுக்குத் தண்ணீர் திறந்து விடுமாறு மக்கள் கோரி வைத்தனர். அதன்படி மக்களின் கோரிகைகயை ஏற்று தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமராவதி அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு! - Amaravathi dam water released today
திருப்பூர்: விவசாய நிலங்கள் பாசன வசதிக்காக அமராவதி அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
Amaravathi dam
முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தொடங்கி 2020 ஜனவரி 18 ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும் என்றும், இதன் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும், மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.