அமராவதி அணை மூலம், திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, விவசாய நிலங்கள் பாசனவசதி பெற்றுவருகின்றன. பழைய, புதிய பாசன பகுதிகளுக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு மக்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று அமராவதி அணையிலிருந்து தண்ணீரை திறந்துவைத்தனர்.
அமராவதி அணையிலிருந்து நீர் திறப்பு இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், "தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். திருப்பூர், கரூர் ஆகிய இரு மாவட்டங்களில் உள்ள 53 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களின் பாசனங்களுக்கு பயன்படும் வகையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டள்ளது.
இதன்மூலம் விவசாயிகள் அதிகப்படியான மகசூல் பெற வாழ்த்துகிறேன். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிப்படையில் ஒரு விவசாயி என்பதால் அவர் விவசாயிகளுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்வார்" என்றார்.
இதையும் படிங்க: அமராவதி அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு!