திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. நிவர் மற்றும் புரெவி புயலால் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்த கனமழையின் காரணமாக அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது.
அமராவதி அணை திறப்பு:கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - Amravati Dam
திருப்பூர்: அமராவதி அணை நீர்மட்டம் 86 அடியாக உயர்ததையடுத்து ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Flood risk warning
இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 86 அடிக்கு உயர்ததையடுத்து பாதுகாப்பு கருதி உபரி நீர் எந்நேரமும் திறக்கப்படலாம் என்பதால் திருப்பூர், கரூர் மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நிவர் புயல் பாதிப்புகள்! - மத்திய குழு இன்று பார்வை!