திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் பீஸ்ரேட், டைம்ரேட், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உயர்ந்துள்ள விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்றவாறு நியாயமான ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், தீபாவளிக்கு சில நாள்களே உள்ள நிலையில் பின்னலாடை நிறுவனங்கள் தாமதிக்காமல் உடனடியாக ஊக்கத்தொகை வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.