திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பனமரத்துபாளையம் உப்பாறு அணை பகுதியில், கோவை சூலூர் விமானப்படையைச் சேர்ந்த மூன்று ராணுவ ஹெலிகாப்டரில் போர் பயிற்சி நடைபெற்றது. இதில் 10க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
முன்னறிவிப்பின்றி போர் ஒத்திகையில் ஈடுபட்ட விமானப்படை - திருப்பூர்
திருப்பூர்: உப்பாறு அணை பகுதியில் முன்னறிவிப்பின்றி ராணுவ ஹெலிகாப்டர்களில் 10க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒத்திகையில் ஈடுபட்ட விமானப் படை.
இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமடித்தபடி இருக்க, ஒரு ஹெலிகாப்டர் மட்டும் தரை இறங்கியது. அதிலிருந்து நவீன ரக துப்பாக்கிகளுடன் தரையிறங்கிய ராணுவ வீரர்கள், எதிரிகளை தாக்குவது போலவும் அவர்களை சிறை பிடிப்பது போலவும் பயிற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அப்பகுதி மக்களிடம் எந்த முன்னறிவிப்பும் இன்றி போர் பயிற்சி நடைபெற்றதால், பரபரப்பு ஏற்பட்டது.