திருப்பூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் உள்ளன. இதில் வெளி மாவட்ட, மாநில தொழிலாளர்கள் என 8 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜன.13 போகி பண்டிகை, ஜன.14 தைப் பொங்கல், ஜன.15 மாட்டுப்பொங்கல், ஜன.16 உழவர் திருநாள் என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.