தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமைத் திருத்த சட்டம் வேண்டும் - ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் வழக்கறிஞர்கள் - Tamilnadu news

திருப்பூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், இச்சட்டத்தை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளைக் கண்டித்தும், வழக்கறிஞர்கள் திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் செய்திகள்
திருப்பூரில் குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்

By

Published : Jan 13, 2020, 6:55 PM IST

சமீபத்தில் அமலுக்கு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளதென நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அந்த சட்டத்தைத் தவறாக சித்தரித்து எதிர்ப்பு தெரிவித்துவரும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கண்டித்தும் திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், அம்மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம் வேண்டும், பிரிவினைவாத சக்திகளை எதிர்ப்போம் என்பன உள்ளிட்ட இச்சட்டத்திற்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பியும், இச்சட்டத்திற்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், 30க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்காக வாபஸ் பெறக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: பிரதமரை விவாதத்திற்கு அழைக்கும் ப. சிதம்பரம்

ABOUT THE AUTHOR

...view details