தமிழ்நாடு முழுவதும் அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை, புரட்சித் தலைவி அம்மா பேரவை உள்ளிட்ட அணிகளுக்கான உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகர மாவட்ட கழகச் செயலாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 12) நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுகவுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் கட்சியில் அதிகப்படியான இளைஞர்களை இணைத்து வரும் சட்டப்பேரைவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம். திருப்பூரிலுள்ள மூன்று தொகுதிகளிலும் சிறப்பாக செயல்பட்டு திருப்பூரை அதிமுகவின் கோட்டையாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.