திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சட்டப்பேரவைத் தொகுதியில், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மு.பெ. சாமிநாதனும், அதிமுக சார்பில் ஏ.எஸ். ராமலிங்கம் என்கிற முருகவேலும் வேட்பாளர்களாக நிற்கின்றனர்.
காங்கேயம் தொகுதி

இந்நிலையில், அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கு நன்றி என காங்கேயம் தொகுதிக்குட்பட்ட பழையகோட்டை எனும் பகுதியில் அதிமுக உறுப்பினர்களால் பதாகை வைக்கப்பட்டது. அந்த பதாகையில், 13,483 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக வேட்பாளர் ஏ.எஸ். ராமலிங்கம் கவனத்திற்கு கொண்டுசெல்லுப்பட்டு, உடனடியாக நிர்வாகிகளை தொடர்புகொண்டு பதாகை அகற்றக் கோரியதுடன், அவருடைய முகநூல் பக்கத்திலும் தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், இதுபோன்ற சம்பவங்கள் தேர்தல் விதிகளுக்கு எதிரானது என்றும், கட்சியின் கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளார். பேனர் வைத்த சில மணி நேரங்களில் அவை அகற்றப்பட்டது.