தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சின்னதம்பி யானையின் நடவடிக்கைகள் - ஆய்வு - சின்னதம்பியின்

உடுமலை அருகே கிருஷ்ணாபுரத்தில் சுற்றிவரும் சின்னத்தம்பியின் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய, கூடுதல் தலைமை வனப் பாதுகாவலர் வெங்கடேசன் வருகை தந்தார்

aff

By

Published : Feb 8, 2019, 12:03 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கிருஷ்ணாபுரத்தில் கடந்த ஐந்து தினங்களாக சுற்றி வந்த சின்னத்தம்பி யானை இன்று காலை முதல் செங்கழனி புதூர் என்ற கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து நெல் கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது. இதனால் காலையில் கிராமத்து மக்கள் மற்றும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வனத்துறையினர் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர். போராட்டத்தை தொடர்ந்து கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேசன் அவ்விடத்திற்கு வந்து சின்னத்தம்பியின் நடவடிக்கைகளை கவனித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சின்னத்தம்பி சேதப்படுத்திய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கு முறையீடு செய்வதாக கூறினார். ஒரு யானையானது ஒரு காட்டையே உருவாக்கக்கூடும் என்ற அவர், நாளை முதல் கும்கி யானைகளைக் கொண்டு இடம்மாற்றி காப்பு காட்டிற்குள் கொண்டு செல்லும் பணிகள் தொடரும் என்றார். இதற்கிடையில் குடிபோதையில் ஒரு விவசாயி பயிரை மேய்ந்து கொண்டிருந்த சின்ன தம்பியின் அருகில் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details