தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் சதீஷுக்கு இந்த நடிகைகளுடன் நடிக்க ஆசையா? - சமந்தா

Actor Sathish in Tiruppur: சமந்தா, கீர்த்தி சுரேஷ் என எல்லா நடிகைகளுடனும் நடிக்க ஆசை உள்ளது என திருப்பூரில் நடைபெற்ற காஞ்சூரிங் கண்ணப்பன் திரைப்படத்தின் 25வது நாள் வெற்றி விழாவில் நடிகர் சதீஷ் தெரிவித்தார்.

actor sathish press meet
actor sathish press meet

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2023, 10:21 PM IST

"சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகைகளுடன் நடிக்க ஆசை" - நடிகர் சதீஷ்!

திருப்பூர்: நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடித்து வெளியான காஞ்சூரிங் கண்ணப்பன் திரைப்படம் 25 நாட்களாக திரையரங்கில் ஓடி வருகிறது. இதனைக் கொண்டாடும் வகையில், திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில் 25வது நாள் வெற்றி விழாவில் நடிகர் சதீஷ் கலந்து கொண்டார். பின்னர் திரையரங்கில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

இதனை தொடர்ந்து 25வது நாளை கொண்டாடும் வகையில், கேக் ஒன்றை ரசிகர்களுடன் சேர்ந்து வெட்டி, அதனை குழந்தைகளுக்கு ஊட்டினார். தொடர்ந்து மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில், குறும்படம் ஒன்று திரையிடப்பட்டு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சதீஷ் கூறுகையில், "தற்போதைய காலகட்டத்தில் ஒரு படம் 25 நாட்கள் ஓடுகிறது என்றால், அது 100 நாட்களுக்குச் சமம். அந்த வகையில், காஞ்சூரிங் கண்ணப்பன் வெற்றிகரமாக ஓடி வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க இருக்கிறேன். மறைந்த நடிகர் விஜயகாந்த்திற்கு நடிகர் சங்கம் மரியாதை செய்வது என்பது, அது நடிகர் சங்கத்திற்கு கிடைத்த பெருமை. நடிகர் சங்கத்தின் ஒரு அடையாளமே விஜயகாந்த் தான்” என்றார்.

எந்த நடிகைகளுடன் நடிக்க விருப்பம் என்ற கேள்விக்கு, “நீங்கள் அவர்களிடம் தான் கேட்க வேண்டும். சமந்தா, கீர்த்தி சுரேஷ் என எல்லா நடிகைகளுடன் நடிக்க எனக்கு ஆசைதான். அது நடிகைகளின் விருப்பம். தானாக எந்த முடிவும் எடுப்பதில்லை. கதைக்கேற்ற கதாபாத்திரங்களிலேயே நடிக்கிறேன்" என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் திரையரங்கு உரிமையாளரும், சங்கத் தலைவருமான சக்தி சுப்பிரமணியம் பேசுகையில், "கடந்த டிசம்பர் மாதத்தில் பெரும்பாலான திரையரங்குகள் பொருளாதாரம் ரீதியாக பின்னடைவைச் சந்தித்தது. அதில் இருந்து மீட்டு எடுத்தது, நடிகர் சதீஷ் நடித்து வெளியான காஞ்சூரிங் கண்ணப்பன் திரைப்படம்தான். இது போன்ற சிறிய பட்ஜெட் படங்கள் வெற்றி பெறுவது தயாரிப்பாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:The Greatest of All Time; தளபதி 68 ஃப்ர்ஸ்ட் லுக் வெளியானது!

ABOUT THE AUTHOR

...view details