தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'120 முறை மனு அளித்துவிட்டேன்; இதற்கு மேலும் முடியாது என்னை கருணைக் கொலை செய்ங்க' - நிவாரணத் தொகை வழங்கவில்லை என்றால் கருணைக் கொலை செய்ங்க

திருப்பூர்: கடந்த 10 ஆண்டுகளாக முதலமைச்சர் விபத்து நிவாரண உதவித் தொகை கேட்டு 120 முறை மனு கொடுத்தும் தனக்கு அளிக்கப்படவில்லை என்பதால் தன்னைக் கருணைக் கொலை செய்துவிடும்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

a person give petition for coupdegrace him
a person give petition for coupdegrace him

By

Published : Mar 9, 2020, 7:47 PM IST

Updated : Mar 9, 2020, 7:53 PM IST

திருப்பூர் மாவட்டம் அன்னூர் நாகம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவர் லட்சுமி நகரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கடன் சுமைக்கு ஆளாகியுள்ளார். இதற்கிடையே விபத்தில் சிக்கி நடக்கமுடியாத சூழ்நிலைக்கும் அவர் தள்ளப்பட்டுள்ளார்.

இதையடுத்து முதலமைச்சர் விபத்து நிவாரணத் தொகைக்கு கடந்த 10 ஆண்டுகளாக விண்ணப்பித்து வந்துள்ளார். ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தனக்கு நிவாரணத் தொகை வேண்டி முதலமைச்சர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

துரைசாமி பேட்டி

பின்னர் அவரிடம் நிவாரணத் தொகை குறித்த விண்ணப்பம் திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அங்கிருந்த அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனாலும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னைக் கருணைக் கொலை செய்துவிடும்படி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுதொடர்பாக துரைசாமி கூறுகையில், “எனக்கு நிவாரணத் தொகை வேண்டி இதுவரை 120 முறை மனு அளித்துள்ளேன். இந்த மனுக்களை அளிக்க சென்னைக்கும் திருப்பூருக்கும் போய் வந்ததில் சுமார் 1 லட்சத்துக்கும் மேலாகச் செலவு செய்துவிட்டேன். ஆனாலும் எனக்கு நிவாரணத் தொகை அரசு கொடுக்கவில்லை. அதனால் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்” என்று வேதனை தெரிவித்தார்.

இதையும் படிங்க:'மகன் கொடுமை தாங்கவில்லை' - கருணை கொலை செய்ய கோரி வயதான பெற்றோர் கோரிக்கை!

Last Updated : Mar 9, 2020, 7:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details