தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கணவருக்கு பேதி மாத்திரை கொடுத்த மனைவி கொலை! - a man killed his wife

திருப்பூர்: பேதி மாத்திரை கொடுத்த மனைவியை ஆத்திரத்தில் அடித்துக் கொலை செய்த கணவன் காவல்துறையிடம் சரணடைந்தார்.

மனைவியை கொலை செய்த கணவன்

By

Published : Aug 28, 2019, 12:42 PM IST

திருப்பூர் ஏபிடி சாலை பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவருக்கு சாந்தி, திலகவதி ஆகிய இரு மனைவிகள் உள்ளனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். ரமேஷ் திருப்பூர் கல்லூரி சாலை மரக்கடைப் பகுதியில் சொந்தமாக கோழிக்கறி கடை நடத்தி வருகிறார்.

மனைவியைக் கொன்ற கணவன்.

ரமேஷ் தினந்தோறும் குடிபோதையில் சாந்தி, திலகவதி ஆகியோரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தி, திலகவதி இருவரும் சேர்ந்து கணவர் உண்ணும் உணவில் பேதி மாத்திரையை கலந்து கொடுத்துள்ளனர். இதையறிந்த ரமேஷ் தனது மனைவிகளை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் முதல் மனைவி சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், இரண்டாவது மனைவி திலகவதி மயக்கம் அடைந்துள்ளார்.

மனைவியைக் கொலை செய்த ரமேஷ்.

இதனையடுத்து ரமேஷ் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் சென்று தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளார். பின்பு,சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ஆபத்தான நிலையில் இருந்த ரமேஷின் இரண்டாவது மனைவியை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு முதல் மனைவியின் உடலை உடற்கூறாய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details