திருப்பூர், என்ஆர்கே புரத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் பல்லடம் அடுத்துள்ள பொங்களூருக்கு காரில் சென்றுள்ளார். பல்லடம் அருகே சென்றுக்கொண்டிருக்கும் போது அவருக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.
காரில் சென்றவருக்கு 'ஹெல்மெட்' அணியவில்லை என அபராதம் - திருப்பூர், பல்லடம், ஹெல்மெட், அபராதம், கார், நான்கு சக்கர வாகனம், அபராத ரசீது
திருப்பூர்: பல்லடம் அருகே காரில் சென்ற நபருக்கு ஹெல்மெட் அணியவில்லை என காவல் துறையினர் அபராதத்திற்கான ரசீதை அளித்துள்ளனர்.
அதில் இவரின், கார் எண் குறிப்பிடப்பட்டு, வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த நபர் ஹெல்மெட் அணியவில்லை என ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து செல்வகுமார் கூறுகையில், தனக்கு ஹெல்மெட் அணியவில்லை என தாராபுரம் காவல் நிலையத்தில் இருந்து அபராதம் விதிக்கப்பட்ட ரசீது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் பகுதிக்கு செல்லாத நிலையில் தனது வாகன எண் தவறாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பது பயத்தை அளிக்கிறது என்றார்.
தற்போது அதிக அபராதம் விதிக்கப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், தவறுதலாக வாகனங்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படுவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தாராபுரம் காவல் நிலையம் தகவல் ஏதும் அளிக்கவில்லை.