தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்று இடத்தில் நடப்பட்ட 75 ஆண்டு பழமையான அரசமரம்! - A 75 year old royal tree was transplanted in Tirupur

திருப்பூர்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக அகற்றப்பட இருந்த 75 ஆண்டுகால பழமையான அரசமரம் சமூக ஆர்வலர்கள் முயற்சியால் மாற்று இடத்திற்கு கொண்டு நடப்பட்டது.

75 year old royal tree

By

Published : Nov 24, 2019, 11:41 PM IST

திருப்பூர் மாவட்டம் குமரன் சாலை பகுதியில் அமைந்துள்ள டவுன்ஹால் கட்டிடம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இடிக்கப்பட்டு வணிக வளாகம் கட்டும் பணிதொடங்கியுள்ளது. இதற்காக அப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன. இதே பகுதியில் 75 ஆண்டுகள் பழமையான அரசமரம் ஒன்று இருந்தது.

இந்த மரம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரிவாக்கப் பணி மேற்கொள்ளும் போது வெட்டப்படும் என்ற தகவலை அறிந்த தனியார் அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த மரத்தினை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட முடிவு செய்தனர்.

அதன்படி, கோவையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் இந்தப் பணிக்கான செலவையும், மரத்தை நட்டு பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து, இன்று காலை 7 மணிக்கு மரத்தினை இரண்டு கிரேன், ஒரு ஜேசிபி இயந்திரம் உதவியுடன்அகற்றும் பணி தொடங்கியது.

மாற்று இடத்திற்கு எடுத்துச் செல்ல மரத்தை அகற்றும் பணியில்

அதன்பின், ஏழு மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற மரத்தை அகற்றும் பணி நிறைவடைந்து லாரியில் ஏற்றப்பட்டு கோவையில் உள்ள காலப்பட்டி பகுதியில் நடுவதற்காக கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்கள் மரங்களை பராமரிக்க வேண்டும், மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும், அரசு பணியின்போது அகற்றப்படும் மரங்களை வேறு இடங்களில் மாற்று நட இயற்கை ஆர்வலர்கள் முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த மரம் நட இருப்பதாக இப்பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:

500 ஆண்டுகள் பழமையான நாவல் மரம்... அருகில் சென்ற பார்க்க முடியாததால் சுற்றுலாப் பயணிகள் வேதனை!

ABOUT THE AUTHOR

...view details