திருப்பூர் செரிப் காலனி பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம், தங்கம் தம்பதியின் மகன் இசக்கிராஜ். இவர், திருப்பூர் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவருகிறார். இவர் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறி மருந்து பாட்டிலுடன் ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார்.
இதுகுறித்து பேசிய மாணவர் இசக்கிராஜ், 'கடந்த சில நாள்களாக செய்திகளில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலர் உயிரிழப்பதை அறிந்தேன். அது எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. ஆகையால், இதற்கு மருந்து தயாரிக்க வேண்டும் என எண்ணி எனது பாட்டியின் உதவியுடன் வேப்பிலை, துளசி, நிலவேம்பு, தூதுவளை, பாப்பாளி இலை உள்ளிட்ட மூலிகை இலைகளை அறைத்து சாறு தயாரித்தேன்.