தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூரில் குட்கா பறிமுதல் - இருவர் கைது...!

திருப்பூர்: 760 கிலோ தடை செய்யப்பட்ட பான், குட்கா பொருட்களை பறிமுதல் செய்து இருவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

760 kg of Kutka seized in Tiruppur
760 kg of Kutka seized in Tiruppur

By

Published : Dec 21, 2019, 7:27 PM IST

திருப்பூர் மாவட்டம் அதியமான் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் தினேஷ் பட்டில், அவரது சகோதரர் சர்ப்பந்த் ராம். இவர்கள் வீட்டில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பான், குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், அங்கு சென்று ஆய்வு செய்தபோது, சுமார் 760 கிலோ பான், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து தினேஷ், சர்பந்த் ராம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

செய்தியாளர்களிடம் பேசும் துணை காவல் ஆணையர்

இது குறித்து துணை காவல் ஆணையர் பத்ரிநாராயணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருப்பூரில் இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

இதையும் படிங்க:

மதுபோதையில் கல்லூரி மாணவனை கத்தியால் குத்திக் கொலை!

ABOUT THE AUTHOR

...view details