தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை! - திருப்பூர் கொள்ளை

திருப்பூர்: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து 11 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாராணை மேற்கொண்டுவருகின்றனர்.

மூதாட்டி
மூதாட்டி

By

Published : Nov 12, 2020, 5:30 AM IST

திருப்பூர் மாவட்டம் மருதுறை கிராமம் பாரதிபுரத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 74). இவருக்கு சம்பூர்ணம் (55), விஜயா (48) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே அவர்களது கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர்.

திருப்பூர்

இந்த நிலையில் வள்ளியம்மாளின் கணவர் நாச்சிமுத்து இறந்து விட்டதால் பாரதிபுரத்தில் உள்ள தனது விவசாய தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று மாலை, விவசாயி சுப்பிரமணியம் என்பவர் தான் குத்தகைக்கு எடுத்திருந்த வள்ளியம்மாளின் தோட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு, மக்காச்சோள பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார்.

அப்போது வள்ளியம்மாளின் வீடு திறந்த நிலையில் இருப்பதை கண்டு வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு வீட்டின் உள்ளே பீரோ திறந்த நிலையில் இருந்ததையும், வள்ளியம்மாள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கீழே விழுந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்ட விசாரணையில் நேற்று முன்தினம் இரவோ அல்லது நேற்று காலையிலோ மர்ம ஆசாமிகள் அங்கு சென்று வீட்டில் தனியாக இருந்த வள்ளியம்மாளை கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த நகை மற்றும் வள்ளியம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலி என மொத்தம் 11 பவுன் நகைகளையும், ரூ.10 ஆயிரத்தையும் கொள்ளை அடித்துவிட்டு சென்று இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நகைகளை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details