திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த சாலையப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அரசு மருத்துவர் டாக்டர் ரங்கசாமி. இவரது மனைவி கவிதா, அரசு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவர்கள் சென்ற வாரம் உறவினர் வீட்டு திருமணத்திற்காக வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வீட்டுக் கதவை உடைத்து 70 சவரன் நகை கொள்ளை: காம்பவுண்ட் சுவரில் இந்தி மொழியில் குறியீடு!
திருப்பூர்: அவிநாசி அருகே வீட்டின் கதவை உடைத்து 70 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், வீட்டின் காம்பவுண்ட் சுவரில் நஹி(இல்லை) என்று இந்தி மொழியில் குறியீடு எழுதப்பட்டிருப்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான சுமார் 70 சவரன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து ரங்கசாமி அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட வீட்டின் காம்பவுண்ட் சுவரில் நஹி(இல்லை) என்று இந்தியில் எழுதப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் பல நாட்கள் இந்த வீட்டை நோட்டம் விட்டு, அவர்கள் வெளியே சென்ற சமயம் பார்த்து கொள்யைடித்திருப்பதாக காவல்துறையினர் கருதுகின்றனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.