தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏழு வயது சிறுமியை பிச்சையெடுக்கவைத்த பெண்ணை போலீஸில் ஒப்படைத்த பொதுமக்கள்! - பிச்சை எடுத்த ஏழு வயது சிறுமி

திருப்பூர்: ஏழு வயது சிறுமியை பிச்சை எடுக்கவைத்த பெண்ணை பொதுமக்கள் துரத்தி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

girl
girl

By

Published : Dec 1, 2020, 6:30 PM IST

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஏபிடி சாலையில் 7 வயது சிறுமி அப்பகுதி வழியாக செல்வோரிடம் பிச்சை எடுத்துள்ளார்.

இதனைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்தச் சிறுமியிடம் சாப்பாடு வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துள்ளனர்.

ஆனால் சாப்பாடு வேண்டாம் பணம் தான் வேண்டும் என அந்த சிறுமி கூறியுள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி யார் என அப்பகுதி பொதுமக்கள் விசாரித்தனர்.

அப்போது பெண்மணி ஒருவர் இருசக்கரவாகனத்தில் திடீரென அங்கு வந்து அந்த சிறுமியை தன்னுடன் அழைத்துச் சென்றார்.

இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் அந்த பெண்ணை துரத்தி சென்று திருப்பூர் குமரன் கல்லூரி அருகே மடக்கிபிடித்தனர்.

பின்னர் அவரை பொதுமக்கள் விசாரிக்கையில் சரிவர தகவல் கூறவில்லை. இதனையடுத்து கல்லூரி அருகே இருந்த ஆண்டிபாளையம் வாகன சோதனை சாவடியில் இருந்த காவல்துறையினரிடம் அந்தப் பெண்ணையும் சிறுமியையும் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

காவல்துறையினர் அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டபோதும் சரிவர ஒத்துழைக்காமல் இருந்துள்ளார்.

இதனையடுத்து சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் அளிக்கப்பட்டு அந்தப் பெண் யார் என்பது குறித்தும், சிறுமி கடத்தப்பட்டு வந்தாரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details