அறுபடை வீடுகளில் முதன்மையானதும் புகழ்பெற்றதுமான பழனி பாலதண்டாயுதபாணி கோயில். ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் பக்தர்கள் மாலை அணிந்து, பாதயாத்திரையாக காவடி சுமந்து சென்று நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம்.
அதே போல், இந்த ஆண்டும் பாத யாத்திரையாக தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த முருக பக்தர்கள் குடும்பத்துடன் பாதயாத்திரை செல்கின்றனர். இவர்கள் அனைவரும் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் ஒன்றிணைந்து செல்வதால், சாலை முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.