திருப்பூர் மாவட்டம் குமரன் சாலையில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி தட்சிணாமூர்த்தி தலைமையில் அலுவர்கள், வட்டாச்சியர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்த சிவக்குமார், ராம்குமார், முத்துப்பாண்டி ஆகிய 3 பேரிடமிருந்து 60 ஆயிரத்து 800 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்களிடம் அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.
லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை விசாரணையில், பட்டா மாறுதலுக்காக அலுவலர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து துணை வட்டாட்சியர் உள்பட அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: ஊழல் அரசியலை அகற்றி தமிழ்நாட்டை மீட்டெடுப்போம் - கமல்ஹாசன்