தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூர் செய்தியாளர்களுக்கு கரோனா கண்டறிதல் சோதனை

திருப்பூர்: திருப்பூரில் களப்பணியில் உள்ள செய்தியாளர்களுக்கு முதற்கட்ட கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூர் செய்தியாளருக்கு கரோனா பரிசோதனை
திருப்பூர் செய்தியாளருக்கு கரோனா பரிசோதனை

By

Published : Apr 21, 2020, 2:54 PM IST

இந்தியாவில் மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் செய்தியாளர்களுக்கும் கரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் கரோனா வைரசால் இதுவரை 109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் களப்பணியாற்றிவரும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட ஊடகவியலாளர்களுக்கு முதற்கட்ட கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூர் செய்தியாளருக்கு கரோனா பரிசோதனை

60-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில் யாருக்கும் கரோனா தொற்று இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. இந்தச் சோதனையை மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதையும் படிங்க: துணை காவல் ஆய்வாளர் பேச்சைக் கேட்டு கலைந்த மக்கள்

ABOUT THE AUTHOR

...view details