தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூரில் 530 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் - திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூர் : புகையிலைப் பொருள்களைக் கடத்திய இரண்டு பேரைக் கைது செய்த காவல் துறையினர், அவர்கள் கடத்தலுக்குப் பயன்படுத்திய ஆட்டோ, 530 கிலோ புகையிலைப் பொருள்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

திருப்பூரில் 530 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருப்பூரில் 530 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

By

Published : Nov 16, 2020, 5:15 PM IST

திருப்பூர் மாவட்டம், ராயபுரம் பகுதியில் காவல் துறையினர் தங்களது வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற ஆட்டோவை நிறுத்தி அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஆட்டோவில் வந்த இரண்டு பேர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததைத் தொடர்ந்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அரசால் தடை செய்யப்பட்ட 530 கிலோ புகையிலைப் பொருள்கள் அவர்களிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த விசாரணையில் அவர்களது பெயர் தங்கராஜ், மதன் குமார் என்பதும் தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ, 530 கிலோ புகையிலை பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் - ஒருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details