தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நான்கு மாத கருவை சாக்கடையில் வீசி சென்ற அவலம்! - Latest Tirupur News

திருப்பூர்: பல்லடம் பகுதியில் நான்கு மாத கருவை சாக்கடையில் வீசி சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.

4 months infant thrown in Drainage
4 months infant thrown in Drainage

By

Published : Oct 10, 2020, 3:21 AM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மேற்கு பல்லடம் பகுதியில் நேற்று மாலை சாக்கடையில் இருந்து நான்கு மாதமே ஆன கரு கண்டெடுக்கப்பட்டது.

மேற்கு பல்லடம் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டருந்த பெண் ஊழியர் ஒருவர், சாக்கடையை சுத்தம் செய்யும் போது 4 மாத கரு கிடந்ததை பார்த்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக பல்லடம் காவல்துறையினருக்கும், சுகாதார அலுவலர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்கள் சாக்கடையில் இருந்த 4 மாத கருவை மீட்டனர். மேலும் இந்த கருவை சாக்கடையில் தூக்கி வீசி சென்றவர்கள் யார் எனவும், பல்லடம் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:உ.பி.,யில் தொடரும் வன்கொடுமை சம்பவங்கள்: பாலியல் வன்புணர்வுக்குள்ளான 13 வயது சிறுமி

ABOUT THE AUTHOR

...view details