நாட்டிற்காக பணிபுரிந்து உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்றை திருப்பூரைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் மேற்கொண்டுள்ளனர். இந்திய ராணுவத்தையும், தேசியக்கொடியின் மகத்துவத்தைவும் போற்றும் வகையில் 330 மீட்டர் நீள அகலமுள்ள தேசியக்கொடியை திருப்பூரைச் சேர்ந்த தனியார் பள்ளி தயார்செய்துள்ளது.
330 மீட்டர் தேசிய கொடியுடன் ஊர்வலம், அசத்திய திருப்பூர் பள்ளி மாணவர்கள் - indian army
திருப்பூர்: இந்தியாவுக்காக உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் 330 மீட்டர் அளவுள்ள தேசியக்கொடியை ஏந்தி மாணவ மாணவிகள் ஊர்வலம் சென்றனர்.
ind
110 மீட்டர் நீளம் 3 மீட்டர் அகலம் கொண்ட, சுமார் 330 மீட்டர் நீள அகலம் அளவிலான தேசியக் கொடியை ஏந்தி கொண்டு அப்பள்ளி மாணவர்கள் திருப்பூர் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தேசிய கொடியின் பெருமையை பொதுமக்கள் மத்தியில் கொண்டுசேர்க்கும் வகையில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றதாக மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.