திருப்பூர்:திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் பிரேம்குமார், பூபாலன், நித்திஷ். இவர்கள் மூன்று பேரும் காரில் நாமக்கலில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கோவையில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த லாரியானது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காருக்குள் பயணித்த மூன்று இளைஞர்களும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதனை அடுத்து அந்த வழியே சென்றவர்கள் இவ்விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் போலீசார் காரில் இடிப்பாடுகளில் சிக்கியிருந்த இளைஞர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.