திருப்பூர்:உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் கொழுமம் ஊராட்சி பகுதியில் உள்ள சாவடி எனப்படும் தங்கும் விடுதி உள்ளது. இந்தப் பகுதியில் கூலித் தொழிலாளர்கள் இன்று (அக்.16) காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக சாவடி அருகே பழனி செல்லும் பேருந்துக்காக காத்திருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக சாவடியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் கூலி தொழிலாளர்கள் மணிகண்டன்(28), கௌதம்(29), முரளி ராஜன்(35) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து, உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து மூன்று பேரின் உடல்களும் உடுமலை அரசு மருத்துவமனையில் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அப்பகுதியில் கனமழை பெய்த காரணத்தால் சாவடியின் மேற்கூரை இடிந்து விழுந்து இருக்கலாம் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உடுமலை அருகே கூலித் தொழிலாளர்கள் பேருந்துக்காக சாவடி அருகே காத்து இருந்தபோது, மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, கொழுமம் - பழனி சாலையில் உள்ள சாவடியின் முகப்பு மேற்கூரை எதிர்பாராவிதமாக இடிந்து விழுந்த விபத்தில் முரளி ராஜா, கௌதம், சின்னத்தேவன் ஆகியோர் உயிரிழந்த செய்தியைக் கெட்டு மிகுந்த வேதனயைடந்தததாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆறுதலை தெரிவித்ததோடு, தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:காற்றாலை மீது விழுந்த இடி! பற்றி எரிந்த காற்றாலை - பெரும் சேதம் தவிர்ப்பு!