தமிழ்நாடு

tamil nadu

லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு!

By

Published : Mar 8, 2021, 2:48 PM IST

திருப்பூர்: கான்கிரீட் கலவை கலக்கும் லாரி மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Breaking News

திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள தாடிக்கார் முக்கு பகுதியில் வேலுச்சாமி, கருணாநிதி ஆகியோர் சாலையை கடப்பதற்காக இருசக்கர வாகனத்தில் இருந்தபடியே நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் நிலைதடுமாறி இருவரும் லாரியின் பின் பின்பக்க சக்கரத்தில் சிக்கினர்.

இதில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனடியாக வந்த காவல் துறையினர் இருவரின் உடலையும் மீட்டு உடற்கூராய்விற்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:திருமணத்திற்காக சேர்த்து வைத்த 100 பவுன் நகை, ரூ.10 லட்சம் திருட்டு

ABOUT THE AUTHOR

...view details