தமிழ்நாட்டில் இன்று 6 ஆயிரத்து 972 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 688ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்பு: திருப்பூரில் 757 பேருக்கு கரோனா உறுதி! - திருப்பூர் மாவட்ட செய்திகள்
திருப்பூர்: இன்று ஓரே நாளில் புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப் பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 757ஆக உயர்ந்துள்ளது.

Tiruppur corona cases
இதில், திருப்பூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 18 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 757ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 12 பேர் உயிரிழந்த நிலையில், இன்று 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.