தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூரில் எரிசாராயம் தயாரித்த கேரள மாநிலத்தவர் தப்பியோட்டம் - தோட்டத்தில் 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

திருப்பூர்: சின்னக்கனூர் பகுதியில் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு தனிப்படையினர் பறிமுதல் செய்தனர்.

illicit liquor
illicit liquor

By

Published : Jan 18, 2020, 5:56 PM IST

திருப்பூர் மாவட்டம், சேவுர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னக்கனூர் என்னும் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாயத் தோட்டம் உள்ளது.

இவர் கேரளாவைச் சேர்ந்த சிலருக்கு அந்த தோட்டத்தில் உள்ள வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். அவர்கள் எரிசாராயம் தயாரித்து கேரளாவிற்கு ஏற்றுமதி செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தோட்டத்தில் எரிசாராயம் பதுக்கி வைத்து இருப்பதாக சேலம் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் ராஜாவுக்குத் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், மத்திய குற்றப்புலனாய்வு காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில், 450 கேன்களில் 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இடத்தின் உரிமையாளர் கணேசனை கைது செய்த காவல் துறையினர் கேரளாவைச் சேர்ந்த நபர்களை தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தோட்டத்தில் பதுக்கிவைத்திருந்த 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

இதையும் படிங்க: லயோலா கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details