கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் சாலையில் திரியும் பொதுமக்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் புஷ்பா ரவுண்டானா பகுதியில் அநாவசியமாக சாலையில் சுற்றித் திரிந்த வாகன ஓட்டிகளை பிடித்த காவல் துறையினர், அவர்களை நாற்காலி போல அமரவைத்து நூதன தண்டனை வழங்கினர்.
நூதன தண்டனை வழங்கிய காவல் துறையினர் மேலும், அரசின் ஊரடங்கு உத்தரவை மதித்து, அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என காவல் துறையினர் கேட்டுக்கொண்டுனர். இந்நிலையில் பங்களா பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை காவல் துறையினர் தாக்குகின்ற காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க:'வாகன ஓட்டிகள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும்' - சென்னை ஆணையர்