திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவருக்கு சொந்தமான பஞ்சு நூற்பாலை அதே பகுதியில் உள்ளது. மேலும் அங்கு 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நூற்பாலையில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இயந்திரத்திலிருந்து புகை வந்துள்ளது. அதனை பார்த்த ஊழியர்கள், உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் நூற்பாலை என்பதால் தீ மளமளவென பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் நூற்பாலையை விட்டு வெளியே தப்பியோடினர்.