திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழ்நாடு - ஆந்திர எல்லைப் பகுதியான வீரனமலை பகுதியை சேர்ந்தவர் பிட்டர் தொழிலாளி கேசவன்(19). இவர் ஆந்திர மாநிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியில் பிட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கரோனா தொற்றால் ஆந்திர மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது சொந்த ஊரான வாணியம்பாடி பகுதிக்கு வந்துள்ளார்.
120 அடி உயர் மின் கோபுரத்திலிருந்து கீழே குதித்து இளைஞர் தற்கோலை! - தமிழ் குற்ற செய்திகள்
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே தமிழ்நாடு - ஆந்திர எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 120 அடி உயர் மின் கோபுரத்தின் மீதிருந்து கிழே குதித்து 19 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக வீட்டிலிருந்த அவர், தும்பேரி செட்டி குட்டை பகுதியில் தனியார் விவசாய நிலத்தில் அமைத்துள்ள 120 அடி உயர் மின் கோபுரத்தில் ஏறி அங்கிருந்து கிழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அம்பலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர், இளைஞரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குடும்ப பிரச்னையால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை காதல் தோல்வியா? என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.