திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்டகுண்டா பகுதியை சேர்ந்தவர் சாமு (28). தேன் எடுப்பதை பிரதான தொழிலாக கொண்ட இவர், ஜூலை 8ஆம் தேதி இரவு தனது நண்பர்களுடன் தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் உள்ள மலைப்பகுதிகளில் தேன் எடுக்கச்சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு முழுவதும் மலைப்பகுதிகளில் மழை பெய்ததால், சாமு மற்றும் அவரது நண்பர்கள் மலைப்பகுதியிலேயே தங்கியுள்ளனர். இதையடுத்து நேற்று (ஜூலை 10) காலை 3 மணியளவில் தேன் எடுக்க சாமு பாறையினுள் இறங்கிய போது, தேனீக்கள் கொட்டியதில் சாமு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து அவரது நண்பர்கள் 2 பேர் தங்கள் கிராமத்திற்கு வந்து சாமு இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் ஊர் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தப் பின்னர், சிலர் மலைப்பகுதியிற்கு சென்று இறந்த சாமுவின் உடலை மீட்டு தங்கள் கிராமத்திற்கு கொண்டு வந்தனர்.