திருப்பத்தூர்:வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (22). பட்டதாரி இளைஞரான இவர் இன்று (செப். 28) காலை தனது வீட்டின் அருகில் உள்ள மின்மாற்றியில் பழுதுநீக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக விக்னேஷ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், மின்மாற்றியிலேயே உடல் தொங்கிய நிலையில் விக்னேஷ் உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி இளைஞர் மரணம் இதையடுத்து, இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த ஆலங்காயம் காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும்,விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க : கீழே கிடந்த செல்போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மூதாட்டி