திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் கோபி - தேன்மொழி. லாரி ஓட்டுநரான கோபி, ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இத்தம்பதியினருக்கு 12 வயதில் மகள் உள்ளார்.
இந்நிலையில் தேன்மொழி, அவரது மகள் இருவரும் வீட்டில் படுத்து உறங்கி கொண்டிருந்துள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த விஜய்(24), வீட்டிற்குள் நுழைந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.