தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியை மிரட்டி நகை, பணம் பறித்த இளைஞர் கைது - குற்றச் செய்திகள்

வாணியம்பாடியில் 15 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதோடு, 6 சவரன் நகைகள், ரூ. 2 லட்சம் ஏமாற்றிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இளைஞர் கைது
இளைஞர் கைது

By

Published : Jun 27, 2021, 8:32 AM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடியைச் சேர்ந்தவர் பைசல் கான் (21). பாலிடெக்னிக் படித்துவிட்டு வேலையின்றிச் சுற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை மூன்று ஆண்டுகளாக காதலிப்பதாகக்கூறி, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் சிறுமியை மிரட்டி 6 சவரன் தங்க நகைகள், ரூ. 2 லட்சம் பணம் ஆகியவற்றையும் ஏமாற்றி பெற்றுள்ளார்.

வீட்டில் நகை, பணம் காணாமல் போனது குறித்து சிறுமியின் பெற்றோர் மிரட்டி விசாரித்துள்ளனர்.

இளைஞர் மீது பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார்

அப்போது பைசல் கான் காதலிப்பதாகக் கூறி நகை, பணத்தை மிரட்டி பெற்றது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பைசல் கானை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் ஏமாற்றி பெற்ற ரொக்கப் பணம் முழுவதையும் இளைஞர் செலவழித்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து இளைஞரிடம் இருந்த 6 சவரன் நகைகளை மட்டும் பறிமுதல் செய்த காவல் துறையினர், அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:இளம் பெண் தற்கொலை: கணவன் உள்பட மூவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details