தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூட்டியிருந்த பள்ளியினுள் நுழைந்து கஞ்சா புகைத்த 5 பேர் கைது! - youths arrest using kanja

திருப்பத்தூர்: பூட்டப்பட்டிருந்த பள்ளியினுள்ளே நுழைந்து கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த 5 பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

பூட்டியிருந்த பள்ளியினுள் நுழைந்து கஞ்சா புகைத்த 5 பேர் கைது!
பூட்டியிருந்த பள்ளியினுள் நுழைந்து கஞ்சா புகைத்த 5 பேர் கைது!

By

Published : Apr 19, 2020, 3:54 PM IST

Updated : May 18, 2020, 6:00 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பஜார் பகுதியிலுள்ள பள்ளியின் மேல் மாடியில் 5 பேர் கொண்ட கும்பல் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, கஞ்சா புகைத்தனர். இது குறித்து, காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணனுக்கு கிடைத்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அக்கும்பலைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.

அவர்களிடையே நடத்திய விசாரணையில், 5 பேரும் அதே பகுதியைச் சேர்ந்த சாகுல் அமீது, டிவின்குமார் விஜய், முகமது பாஷா, வாணியம்பாடி கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஆரிஃப் எனத் தெரியவந்தது.

இந்தக் கும்பல், வாணியம்பாடி பகுதியிலிருந்து கஞ்சா வாங்கி வந்து புகைத்ததாகத் தெரிகிறது. இது குறித்து, தொடர்ந்து அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: 'பிசிஆர் சோதனையில் தவறு வர வாய்ப்பில்லை'

Last Updated : May 18, 2020, 6:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details