தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காக்கங்கரை அருகே தலை துண்டித்த நிலையில் இளைஞர் உடல் - Thiruppathur Distict News

திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டித்த நிலையில் இளைஞர் சடலமாகக் கிடந்தார். இது குறித்து ரயில்வே காவல் துறையினர் கொலையா, தற்கொலையா என விசாரித்துவருகின்றனர்.

காக்கங்கரை அருகே தலை துண்டித்த நிலையில் இளைஞர் உடல்
காக்கங்கரை அருகே தலை துண்டித்த நிலையில் இளைஞர் உடல்

By

Published : Aug 14, 2021, 9:51 AM IST

திருப்பத்தூரை அடுத்த காக்கங்கரை பகுதி அருகே ரயில் தண்டவாளத்தின் அருகில் சுமார் 29 வயது மதிக்கத்தக்க இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு உடல் சிதறிய நிலையில் இறந்துகிடந்தார். அவ்வழியாக வந்த அப்பகுதி மக்கள் இச்சம்பவம் குறித்து சேலம் ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். முதற்கட்ட விசாரணையில், இறந்த இளைஞர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா பச்சூர் கிராமத்தைச் சார்ந்த சதீஷ் என்பது தெரியவந்தது.

அதுமட்டுமன்றி இவரைப் பற்றி காக்கங்கரை பொதுமக்கள் கூறுகையில், "சதீஷ் அடிக்கடி காக்கங்கரை பகுதிக்கு வருவதும் போவதுமாக இருந்தார். இவர் இங்குள்ள ஒரு பெண்ணுடன் திருமண பந்தத்தைத் தாண்டிய உறவில் இருந்தார்" எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, ரயில்வே காவல் துறையினர் சதீஷ் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது இவரை யாராவது கொலைசெய்து சடலத்தை ரயில் பாதையில் வீசிச் சென்றார்களா என்று பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

அதேபோல் சாமல்பட்டி காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கொடநாடு வழக்கில் புதிய திருப்பம்

ABOUT THE AUTHOR

...view details