தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு: இளைஞர் கைது - சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே 17 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

pocso
pocso

By

Published : Jun 26, 2021, 7:46 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அஸ்கர் பாஷா.லாரி ஓட்டுநரான இவர் ஆம்பூர் தார் வழி சாலை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். மேலும் அஸ்கர் பாஷா அச்சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

கைதான அஸ்கர் பாஷா

இதனால் சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுமியின் தாய் அவரிடம் கேட்டுள்ளார். அப்போது சிறுமி தனக்கு நேர்ந்த அவலத்தை கூறியுள்ளார்.

இது கேட்டு அதிர்ந்துபோன சிறுமியின் தாய் உடனே ஆம்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அஸ்கர் பாஷாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அஸ்கர் பாஷா சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து உண்மை என தெரியவந்தது. தொடர்ந்து அவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: 'போக்சோ வழக்குகளில் சமரசத்தில் ஈடுபடும் பெற்றோர்கள் மீது நடவடிக்கை' - துணை ஆணையர்

ABOUT THE AUTHOR

...view details