தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாணியம்பாடியில் இளம்பெண் உயிரிழப்பு - மருத்துவமனையில் வருவாய்த்துறையினர் விசாரணை - திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் : வாணியம்பாடியில் இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், சிகிச்சைக்கு கொண்டுச் சென்ற தனியார் மருத்துவமனையில் வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Young girl dead in Vaniyampadi
Young girl dead in Vaniyampadi

By

Published : Jul 19, 2020, 9:03 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியில் வசித்து வந்தவர் இளம்பெண் ஆயிஷா(19). இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று (ஜூலை 18) இரவு திடீரென வீட்டில் மயங்கி விழுந்த அவரை, காதர்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டுச் சென்றனர். அங்கு மருத்துவர் யுவராசன் என்பவர், இளம்பெண்ணை பரிசோதனை செய்தார்.

இதில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இளம்பெண் உடலை உறவினர்கள் வீட்டிற்கு கொண்டுச் சென்றனர். காதர்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளித்து இறந்துள்ளதாக தகவல் வெளியானதால், சம்பவ இடத்திற்கு வருவாய்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இளம்பெண் திடீரென இறந்ததால் கரோனா நோய்த் தொற்று இருக்குமோ என்ற கோணத்தில் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, இறந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி, பரிசோதனைக்காக உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொண்டார். அதற்கு உறவினர்கள் மறுத்ததால், இறுதிச் சடங்கு முடிந்த பின்னர் உறவினர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும் என்று கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதனிடையே, ராஜா என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வரும் முஹம்மத் ஷஃபி என்பவர், தற்போது அந்த மருத்துவமனையில் மேலாளராக உள்ளார். இவர் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை மருத்துவராக பணியாற்றி வந்தார். 2019 செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி நீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு முஹம்மத் ஷஃபி சிறையில் இருந்துள்ளார்.

சிபிசிஐடி விசாரணையில் அவர் மருத்துவம் முழுமையாக படிக்கவில்லை என்று கூறியிருந்த நிலையில், தற்சமயம் இதே மருத்துவமனையில் மருத்துவர் ஒருவரை நியமித்து இவரே மேலாளராக இருந்து வருகிறார். இதனால் சமந்தப்பட்ட துறை அலுவலர்கள் ராஜா மருத்துவமனையில் பணியாற்றிவரும் மருத்துவரின் சான்றுகளை சரி பார்க்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details