திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் சதீஷ் (24), பெயின்டர் வேலை செய்து வருகிறார். இவர் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கனகராஜ் என்பவரின் மகள் முத்து மணிமாலா (23), பிபிஏ முடித்துள்ளார்.
இந்நிலையில் இருவரும் கடந்த 2 வருடங்களாக இன்ஸ்டாகிராமில் பழகி, காதல் வயப்பட்டு, கடந்த 24ஆம் தேதி கடையநல்லூர் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் திருமணம் செய்து உள்ளனர். முன்னதாக, முத்துமணி மாலாவின் பெற்றோர்கள், சதீஷ் மாற்று சமுதாயத்தைச்சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.