தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணியை நிறுத்திய சக்கரை ஆலை: உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்

திருப்பத்தூர்: கூட்டுறவு சர்க்கரை ஆலை பணியை தொடங்க வலியுறுத்தி 10ஆவது  நாளாக தொழிலாளிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

sit in protest
sit in protest

By

Published : Nov 17, 2020, 12:22 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி கேதாண்டபட்டி பகுதியில் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலகம் இயங்கி வருகிறது.

இதன் முன்பாக, பணி வழங்காததைக் கண்டித்து தொழிலாளர்கள், விவசாய பிரதிநிதிகள் என 100-க்கும் மேற்பட்டோர்கள் 10ஆவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்தாண்டு கரும்பு உற்பத்தி குறைவாக இருப்பதாக கூறி அரசு ஆலையில் அரவையை நிறுத்தியது. போதிய கரும்பு இருந்தும் தவறான தகவலின் அடிப்படையில் இந்தாண்டும் அரசு ஆலையின் அரவையை நிறுத்த உத்தரவிட்டுள்ளது.

இங்கிருக்கும் கரும்பை வேலூர், அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இதனைக் கண்டித்து 10ஆவது நாளாக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்

இதில், திருப்பத்தூர் சர்க்கரை ஆலை பிறப்பித்துள்ள அரசு ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தியும், மீண்டும் சர்க்கரை ஆலை அரவை தொடங்கவும், நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கவும், அரசுக்கு தவறான தகவல் கொடுத்தும் தனியார் ஆலைக்கு சாதகமான செயலில் ஈடுபட்டு வரும் கரும்பு அபிவிருத்தி அலுவலரை பணி மாற்றம் செய்ய கோரியும் வலியுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: ஊதியம் வழங்காத சர்க்கரை ஆலை: உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்!

ABOUT THE AUTHOR

...view details