திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கிருஷ்ணகிரியில் இருந்து வேலூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 3 பெண்கள் நூதன முறையில் நகை, பணத்தை திருடினர்.
அப்போது பாதிக்கப்பட்ட பெண் கூச்சலிட்டார். உடனே பேருந்தில் நகை, பணத்தை போட்டுவிட்டு 3 பெண்களும் தப்ப முயன்றனர். தொடர்ந்து அவர்களை சக பயணிகள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் பிடிப்பட்ட பெண்கள் குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரியா(25), சபீனா(28), ஜமுனா(30) ஆகியோர் என்பது தெரியவந்தது.