தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்: பாதிக்கப்பட்டவர்கள் புகார் - வேலூர் மாவட்ட செய்திகள்

வேலூர்: அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு அறிமுகமில்லாத பெண்ணிடம் பல லட்சம் ரூபாய் ஏமாந்த நான்கு பெண்கள் ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் புகார்
பாதிக்கப்பட்டவர்கள் புகார்

By

Published : Nov 18, 2020, 1:52 PM IST

வேலூர் மாவட்டம் பொண்ணை அடுத்த பள்ளேரி பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (33). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். சத்யா முக்கிய பிரமுகர்களின் மனைவிகளிடம் நன்கு பழகுவதை போல் ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.

அதில் ஒரு லட்சம் ரூபாய் வங்கியில் கொடுத்தால் மாதம் 600, 700 ரூபாய் மட்டுமே வட்டி கிடைக்கும். ஆனால் தன்னிடம் ஒரு லட்சம் கொடுத்தால் ஐந்து நாள்களுக்கு ஒருமுறை இரண்டாயிரம் ரூபாய் வட்டி கிடைக்கும். ஐந்து சவரன் நகை கொடுத்தால் பத்து நாள்களில் மூவாயிரம் ரூபாய் வட்டி கிடைக்கும் என சத்யா பெண்களிடம் ஏமாற்றியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் புகார்

முதலில் அப்பெண்களிடம் சரியாக வட்டி தொகையை சத்யா கொடுத்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக வட்டி தொகை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களும் சத்யாவிடம் பணம், நகை கேட்டதற்கு மிரட்டியுள்ளார்.

இதனால் சத்யாவிடம் ஏமாந்த நான்கு பெண்கள் ராணிப்போட்டை காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர். மனுவில் சத்தியா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடம் உள்ள தங்களது பணம், நகையை மீட்டுத் தர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பெண்ணிடம் ரூ. 20 லட்சம் பணம் மோசடி!

ABOUT THE AUTHOR

...view details