திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த மாச்சம்பட்டு குப்புராசபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன். கூலி தொழிலியான இவர் தனது வீட்டில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காகக் கள்ளத்தனமாக இரண்டு நாட்டுத்துப்பாக்கிகளைப் பதுக்கி வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் சிலம்பரசன் நாட்டுத்துப்பாக்கிகளுக்கு மருந்துகளை நிரப்பிக் கொண்டிருந்த போது, எதிர்பாராவிதமாக சுட்டத்தில் சிலம்பரசனின் மனைவி கஸ்தூரியின் வயிறு மற்றும் தொடையில் நாட்டுத்துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது. உடனடியாக கஸ்தூரியை மீட்ட அவரது குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.