திருப்பத்தூர்: வாணியம்பாடி உமர்நகர் பகுதியைச் சேர்ந்த ஷாஹிதா (40), கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவனைப் பிரிந்து, தனது மகள் சித்திகா உடன் தனியாக வசித்துவந்தார். அவரது மகள் சித்திகா வாணியம்பாடி பகுதியில் பணிப்பெண்ணாக வேலை செய்துவருகிறார்.
நேற்று முன்தினம் (ஜூன் 19) வேலைக்குச் சென்ற சித்திகா, பணி முடிய நீண்ட நேரம் ஆனதால், பணியிடத்திலேயே தங்கியுள்ளார். இந்நிலையில் ஷாஹிதா வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதையடுத்து சித்திகா நேற்று (ஜூன் 20) வேலை முடிந்து வீடு வந்தபோது, அவருடைய தாய் நிர்வாண நிலையில், உடலில் பல இடங்களில் காயங்களுடன் இறந்து கிடந்ததைக் கண்டு கதறி அழுதுள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் வாணியம்பாடி நகர காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.