திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த காரப்பட்டு பகுதியைச் சேர்ந்த லட்சுமி (48) என்பவர் ஆடைகள் களைந்த நிலையில் இறந்து கிடந்தார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
தகவலின்பேரில் விரைந்த காவல் துறையினர், லட்சுமியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், லட்சுமி கணவனைப் பிரிந்து கடந்த 10 ஆண்டுகளாக காரப்பட்டு கிராமத்தில் தனியாக வசித்துவந்தார்.