தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பான் கார்டு பத்திரம் - பெண்களை குறிவைத்து நடக்கும் மோசடி - பான் கார்டு மோசடி

ஆம்பூரைச் சேர்ந்த பெண்ணிற்கு 6 கோடியே 65 லட்சம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என கடிதம் வந்தது. தனது பான் கார்டு வைத்து மோசடி நடந்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 24, 2022, 7:00 PM IST

திருப்பத்தூர்:ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம பகுதிகளில் வாடகை வீட்டில் வசிக்கும் பெண்களின் ஆதார் எண், வங்கி புத்தகம், பான் கார்டு, போன்ற ஆவணங்களை பயன்படுத்தி கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வரிஏய்ப்பு செய்து வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது அதில் பாதிக்கப்பட்ட பெண், தங்களின் ஆவணங்களை வைத்து போலியான நிறுவனம் நடத்தி கோடி கணக்கில் வரி ஏய்ப்பு செய்வதாக ஆம்பூர் கிராமியம், நகரம் மற்றும் உமராபாத் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளார். ஆம்பூர் காதர்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜாப்ரீன் ஆஷீஸ் (37) என்னும் பெண்ணிற்கு 6 கோடியே 65 லட்சம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என கடிதம் வந்துள்ளது.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஜாப்ரீன் ஆஷீஸ், இது குறித்து தனது ஆவணங்களை சிலர் தவறான முறையில் பயன்படுத்தி போலியான குளோபல் டிரேடர்ஸ் என்னும் நிறுவனம் பெயரில் 6 கோடியே 65 லட்சம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஆம்பூர் நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:சிசிடிவி: கோவிலில் பணம், பொருட்கள் கொள்ளை!

ABOUT THE AUTHOR

...view details